தோரணமலையில் பழனி முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பாக நடைபெற கூட்டுப் பிரார்த்தனை
1 min read
PM Modi celebrated Raksha Bandhan with girls
19.8.2024
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் இக்கோவிலில் மாதாமாதம் பௌர்ணமி தோறும் கிரிவலம் நடைபெறுவது வழக்கம்.
ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 6.30 கிலோமீட்டர் தூரம் உள்ள கிரிவலப் பாதையில் நடந்து வந்தனர். அப்போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கிரிவலம் வந்தனர்.
பின்பு தோரணமலை அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் முன்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. கூட்டு பிரார்த்தனையில் கீழக்கண்ட வேண்டுதல்கள் வைக்ககப்பட்டன.
தமிழக அரசால் நடத்தப்பட உள்ள அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்ம்
விவசாயம் செழிக்கவும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிடவும் போதையில்லா இளைய சமுதாயம் உருவாகிட வேண்டும்
வயநாடு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வாழ்வில் செழிக்க வேண்டும்
இவ்வாறு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
இதில கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பௌர்ணமியை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.