கற்பழித்த சிறுமியை பெரியவள் ஆனதும் திருமணம் செய்த வாலிபர்… ஆனாலும் ஜெயில் தண்டனை
1 min read
A teenager who married a girl who raped her when she became an adult… still jailed
24.8.2024
ராஜஸ்தான் மாநிலம் பூந்தி மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு கவுஷல் ராஜ் (வயது 26) என்ற இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சிறுமியை காணவில்லை என அவரது தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து சிறுமியை போலீசார் தேடி வந்தனர். சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு போலீசார் சிறுமியை கண்டுபிடித்து மீட்டனர். மேலும் கவுஷல் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஜாமீனில் இருந்து வெளியே வந்த கவுஷல் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியான பின்பு அவரையே திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு பூந்தி மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட கவுஷலுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 80,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட கவுஷல் ராஜ் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.