கடையம் பத்திரகாளி அம்மன் கோவில் பாலாலய பூஜை
1 min read
Kadayam Pathirakali Amman Temple Balalaya Pooja
27.8.2024
கடையம் பத்திரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. ஊருக்குள் ஒரு கோவில் இருந்தாலும் ஊருக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் வடபத்துக்குளம் அருகே பத்திரகாளி அம்மன் மூலக் கோவில் இருக்கிறது. இது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை வசம் உள்ளது.
இக்கோவில் திருப்பணிகள் நடந்தது. கோவிலுக்கு கீழ்புறம் உள்ள பள்ளமாக பகுதியை மேடுபடுத்தி அங்கே அன்னதான மண்டபம், உள்பட பல வசதிகள் செய்யப்படுகிறது. மேலும் பத்திரகாளி அம்மன் கோவில் நுழைவு பகுதியில் விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகன் சன்னதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வருகிற 16.9.2024 திங்கட்கிழமை கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி இன்று(புதன் கிழமை ) பாலாலயம் நடக்கிறது. இதற்கான பூர்வாங்க பூஜை இன்று பிற்பகல் நடந்தது. அதேபோல் பரிவார மூர்த்திகளுக்கும் பாலஸ்தாபனம் (பாலாலய ) பூஜை நடைபெற்றது.
இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
நாளை (28.08.24 ஆவணி 12-ந் தேதி) புதன் கிழமை காலை 9 மணிக்கு மேல் பாலாலய அபிஷேகம் நடைபெற்று அம்பாள் இளங்கோவிலில் எழுந்தருள இருக்கிறாள்.