அணைத்துக்கொள்ளும் உறவால் அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே இல்லை: மு.க.ஸ்டாலின் பதிவு
1 min read
No feeling of being in the neighborhood because of embracing relationships: A note by M.K.Stal
2.9.2024
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.. இப்பயணத்தின்போது சான்பிரான்சிஸ்கோவில் கடந்த மாதம் 29-ந் தேதி அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில் அமெரிக்கா சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள், அங்குள்ள தமிழ் சங்கத்தினர் செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
“அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள். தங்களது உழைப்பாலும் – அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க பயணம் குறித்த வீடியோ ஒன்றையும் முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ளார்.