குற்றாலம் விடுதிகளில் ஒரே நாளில் 2 பேர் தற்கொலை
1 min read
2 people committed suicide in Courtalam hostels on the same day
3.9.2024
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் ஒரே நாளில் இரண்டு தனியார் விடுதிகளில் இரண்டு நபர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளளது
தென்காசி அருகே உள்ள கொட்டாகுளம் நாடார் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து இவரது மகன் தங்ககுமார் ( வயது 30). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தனது மனைவியிடம் செலவுக்கு பணம் பெற்றுக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
பின்னர் ஐந்தருவி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த தங்ககுமார் இரவு 7 மணி யளவில் மனைவியிடம் செல்போனில் பேசியுள்ளார். அதன் பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட் டுள்ளது. காலையில் தனியார் விடுதியின் ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது தங்க குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது பற்றி தனியார் விடுதியின் உரிமையாளர் தங்ககுமாரின் பெற்றோர் மற்றும் குற்றாலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றாலம் போலீசார் தங்ககுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். மேலும்
அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதைப்போலவே தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள துவரங்காடு கிராமத்தை சேர்ந்த தங்கத்துரை என்பவரது மகன் சிவா (வயது 18). இவர் பழைய
குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சில மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவில் அறையை சுத்தம் செய்வதற்காக சாவியை எடுத்து சென்றவர் காலை வரை அறையை விட்டு வெளியே வரவில்லை. இரவில் வீட்டுக்கு சென்று விட்ட மேலாளர் நேற்று காலையில் வந்து அறையின் ஜன்னல் வழியாக பார்த்த போது சிவா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது பற்றி உடனடியாக சிவாவின் குடும்பத்தினருக்கும் குற்றாலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த குற்றாலம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர் அப்போது சிவாவின் உறவினர்கள் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றாலத்தில் ஒரே நாளில் இரண்டு நபர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.