July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min read

Chief Minister M. K. Stalin traveled in an automatic car without a driver

3.9.2024-
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியாரின் ‘இனிவரும் உலகம்’ புத்தகத்தில் உள்ள கருத்தோடு தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், “இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை” என்று பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.