சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழையும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
1 min read
Increase in the number of Indians entering the US illegally
3.9.2024
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு கால்நடையாகச் செல்லும் ஆவணமற்ற இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்தாண்டு ஜனவரி- ஜூன் காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு இதே காலகட்டத்தில் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூனில் மட்டும் 5,152 இந்தியவர்கள் சட்ட விரோதமாக நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி தனது ‘டங்கி’ என்ற திரைப்படத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது குறித்து வெளிச்சம் போட்டு காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா-அமெரிக்க எல்லைக் கடப்பைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் இப்போது அமெரிக்காவை அணுகுவதற்கு இந்த நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த வழியைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை, மெக்சிகோ எல்லைப் பாதையைப் பயன்படுத்தும் வழக்கமான பாதையிலிருந்து ஊடுருவல்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.