July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

“ஆடி” கார் நிறுவனத்தின் இத்தாலி தலைவர் 10,000 அடி உயரத்திலிருந்து விழுந்து பலி

1 min read

Italian CEO of “Audi” car company dies after falling from 10,000 feet

3.9.2024
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி [Audi] நிறுவனத்தின் இத்தாலி யூனிட்டின் தலைவர் ஃபேப்ரிசியோ லாங்கோ மலையேற்றத்தில் போது 10,000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 62 வயதான ஃபேப்ரிசியோ லாங்கோ கடந்த 2013 முதல் இத்தாலியில் உள்ள ஆடி கார் யூனிட்டுக்கு தலைவராகச் செயல்பட்டு வந்தவர் ஆவார்.
மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட லாங்கோ இத்தாலி-சுவிஸ் எல்லைக்கு சில மைல் தூரத்தில் உள்ள அடமெல்லோ மலைத்தொடரில் அமைந்துள்ள சிமா பெயர் (Cima Payer) என்ற சிகரத்தை நோக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். கேபிள்கள், பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்தும் இருந்தும் துரதிருஷ்டவசமாகச் சிகரத்தின் அருகில் செல்வதற்கு முன்னர் 10,000 ஆதி உயரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார்.
அவருடன் சென்ற மற்றொரு மலையேற்ற வீரர் உடனே மீட்புக்குழுவுக்குத் தகவல் தெரிவித்த நிலையில் ஹெலிகாப்டர் உதவியுடன் 700 அடி பள்ளத்தாக்கிலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஃபேப்ரிசியோ லாங்கோ மறைவுக்கு ஆடி நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.