July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மரணம்

1 min read

Filmmaker Mohan Natarajan passes away

4.9.2024
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் விஜய் நடித்த ‘கண்ணுக்குள் நிலவு’, அஜித் நடித்த ‘ஆழ்வார்’, சூர்யா நடித்த ‘வேல்’, விக்ரம் நடித்த ‘தெய்வத்திருமகள்’ உட்பட பல படங்களை தயாரித்துள்ளார்.
தயாரிப்பாளர் மோகன் நடராஜன் (71) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

ஸ்ரீ ராஜகாளியம்மன் முவீஸில் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் தயாரித்த படங்கள்,

சுரேஷ், நதியா நடிப்பில் ‘பூக்களை பறிக்காதீர்கள்’, விஜயகாந்த், நதியா நடித்த ‘பூ மழை பொழியுது’, சுரேஷ், நதியா நடித்த ‘இனிய உறவு பூத்தது’, பிரபு, ரூபிணி நடித்த ‘என் தங்கச்சி படிச்சவ’, பிரபு, கௌதமி நடித்த ‘பிள்ளைக்காக’, அர்ஜுன், ரூபினி நடித்த ‘எங்க அண்ணன் வரட்டும்’, சத்யராஜ், கௌதமி நடித்த ‘வேலை கிடைச்சிருச்சு’ , அம்பரீஷ், மாலா ஸ்ரீ நடித்த ‘ரவுடி எம்எல்ஏ’ (கன்னடம்),
பிரபு, குஷ்பூ நடித்த ‘கிழக்குக்கரை’, அருண் பாண்டியன், சுகன்யா நடித்த ‘கோட்டைவாசல்’, சரத்குமார், கனகா நடித்த ‘சாமுண்டி’, பிரபு, குஷ்பூ நடித்த ‘மறவன்’, விஜயகாந்த், வினிதா நடித்த ‘பதவி பிரமாணம்’, ரவிச்சந்திரன், ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘சினேகா’ (கன்னடம்) ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் மோகன் நடராஜனுக்கு நடிகர்கள், திரைப்பட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மோகன் நடராஜன் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.