தென்காசியில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இரண்டு பேர் கைது
1 min read
Two people arrested under the Gangster Prevention Act in Tenkasi
5/9/2-024
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையம் மூலம் போக்சோ வழக்கின் குற்றவாளியான வாவாநகரம் உண்மை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் குமாரவேல்(45) மற்றும் கடையநல்லூர் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கின் குற்றவாளியான வல்லம் கலைஞர் காலனியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அருண்பாண்டியன் ஆகியோர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் இருவரையும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஶ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் உத்தரவின் பேரில் குமாரவேல், அருண்பாண்டியன் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.