July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

வ.உ.சி. 153 பிறந்தநாள்-சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

1 min read

V.O.C. 153 birthdays

5.9.2024
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என பெயர் பெற்றவர் வ.உ.சிதம்பரனார். வ.உ.சி. என்று அழைக்கப்படும் வ.உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதை சென்னை கிண்டியல் அவருடைய உருவப்படத்திற்கு அமைச்சர் சேகர்பாபு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நெல்லையில் உள்ள அவருடைய சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள  சிதம்பரனாரின் முழு உருவ சிலைக்கு மரியாதை செய்யும் நிகழ்வை தமிழ்நாடு வ.உ.சி பேரவை நிர்வாகிகளும் அதன் மாநில இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் வ.உ.சி யின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் அங்கு கூடியிருந்தவர்களுக்கு இனிப்பு, வேஷ்டி சேலை வழங்கி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 

அப்போது அதிமுக மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம் பெருமாள், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜூலியட், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன்,  மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாநகர பகுதி செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், முன்னாள் கவுன்சிலர் செண்பக செல்வன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சத்யாலட்சுமணன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல் ராஜ், அண்ணா தொழிற்சங்க மண்டல போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்வி குமார், தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் மெஜிலா துணை செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் ஜான்சன் தேவராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் டைகர் சிவா, பரிபூரண ராஜா,  சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஏகே மைதின், ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், கே.கே.பி.விஜயன், நவ்சாத், மிக்கேல், பழனி, சங்கர், ஜெயக்குமார், எம்ஜிஆர் நடராஜன், கனகவேல், முன்னாள் கவுன்சிலர் தமிழரசி, மற்றும் பால ஜெயம், சாம்ராஜ், உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.


தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு சைவ வேளாளர் சங்கம் சார்பில் தலைவர் டி.ஏ. தெய்வநாயகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் மீனாட்சிநாதன், பொருளாளர் தளவாய், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், செந்தில் ஆறுமுகம், ஸ்ரீதர், எல்ஐசி கிட்டு, கோமதிநாயகம், மூர்த்தி, பாலன், முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.