பள்ளி விடுதியில் தீ விபத்து: 17 மாணவர்கள் பலி
1 min read
Terrible fire in school hostel: 17 students burnt to death
6/9/2024
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் தங்கிப்படிக்கும் வகையில் மாணவர் விடுதியுள்ளது. இதில் பல மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 13 மாணவர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் பள்ளி விடுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்து காயமடைந்த மாணவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.