திருக்காட்டுப்பள்ளி ஆற்றில் மூழ்கிய 5 வாலிபர்கள்-2 பேர் உடல் மீட்பு
1 min read
5 teenagers who drowned in the river in Thirukkatupalli – 2 recovered
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா கோவிலுக்கு, சென்னை எழும்பூர், நேரு பார்க் ஹவுசிங் போர்டில் குடியிருந்து வரும் சார்லஸ் மகன்கள் பிராங்கிளின் (23), ஆண்டோ (20), அவரது நண்பர்கள் கிஷோர் (20), கலையரசன் (20) மனோகரன் (19) ஆகிய 5 பேரும் வந்தனர்.
இவர்கள் 5 பேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் பொழுது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி மாயமாகினர். இவர்களில் கலையரசன் மற்றும் கிஷோர் மட்டும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.