வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மரணம்
1 min read
Businessmen’s Association President Villiyan passed away
10.9.2024
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நுரையிரல் தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார். கடந்த 3-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வெள்ளையன் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 76. அவர் வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், வணிகர் சங்கத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.