வி.சி.க. மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்தது குறித்து அமைச்சர் உதயநிதி பதில்
1 min read
V.C.K. Minister Udhayanidhi’s response to ADMK’s invitation to the anti-alcohol conference
10/9/2024
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என திருமாவளவன் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் இந்த திடீர் அழைப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நிலையில்,சிவகங்கையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் அரசு திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஆய்வுக்கூட்டத்தின் அறிக்கைகள் தயார் செய்யப்பட்ட பிறகு முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்து அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.