பிரதமர் மோடியை விமர்சித்த மாலத்தீவு மந்திரிகள் 2 பேர் ராஜினாமா
1 min read
2 Maldivian ministers who criticized PM Modi resign
11.9.2024
இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவின் அதிபர் முகமுது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். சீன ஆதரவாளரான அவர் மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவத்தை வெளியேற உத்தரவிட்டார்.
மேலும் இந்திய பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சர்ச்சை கருத்தை தெரிவித்தனர்.
இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியர்கள் பலர் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்தனர். இதனால் மாலத்தீவில் சுற்றுலாத்துறை, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடியை விமர்சித்த மந்திரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
தற்போது இந்தியாவுடன் மாலத்தீவு அரசு இணக்கமான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக கடந்த ஜனவரி மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்ட மந்திரிகள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு, விரைவில் இந்தியாவுக்கு அரசு முறை பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மந்திரிகள் 2 பேர் பதவி விலகியுள்ளனர்.
இதுகுறித்து அதிபர் அலுவலகத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஹீனா வலீத் கூறும்போது, அதிபர் முகமுது முய்சு மிக விரைவில் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இரு தரப்பினரும் ஒரு தேதியை விவாதித்து வருகிறோம் என்றார்.
er