கடையத்தில் பாரதி, காந்தி, விவேகானந்தர் விழா
1 min read
Bharti, Gandhi, Vivekananda festival at the shop
12.9.2024
கடையத்தில் பாரதி காந்தி விவேகானந்தர் தினவிழாவினை நேற்று சேவாலயா நிறுவனம் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவினை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா துவங்கியது.
கடையம் கலாநிலைய மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் வழங்கினர்.
இசைக்குழுவினர் பாரதியார் பாடல்களை பாடினர்.
சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் சிவகாசி ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். கடையம் திருவள்ளுவர் கழக செயலாளரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கல்யாணி சிவகாமி நாதன், ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளரும், திருவள்ளுவர் கழக தலைவருமான ஆ.சேது ராமலிங்கம், நூலகம் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தனர்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் ராமச்சந்திரன் பேசுகையில் முப்பெரும் மகா மனிதர்களின் விழாவாக சேவாலயா இதனை கொண்டாடுவதாகவும், பாரதி காந்தி விவேகானந்தர் ஆகிய மூன்று தலைவர்கள் செய்த அதே சேவையை சேவாலயாவும் செய்வதாக பாராட்டினார்.
இளைய தலைமுறையினர் வாழ்ந்து மறைந்த பின்னரும் அவர்களின் பெயரினை ஊரே பாராட்டும் படி வாழ வேண்டும் என்றார்.
சேவாலயாவின் இறைவணக்கப் பாடலாக பாரதியாரின் “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்கிற கவிதையை தேர்வு செய்ததை வெகுவாக பாராட்டினார். விழா நாயகர்கள் மூவரும் அச்சமின்மையை வலியுறுத்தி வாழ்ந்தவர்கள் ஆகையால் அச்சமின்மையே நோக்கமாகக் கொண்டு இப்பாடலை பொருத்தமாக தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
சேவாலயா நிறுவனர் முரளிதரன் வரவேற்புரை ஆற்றினார். அவர் சேவாலயாவின் 36 ஆண்டு கால சேவைகளான ஏழை எளியோருக்கு கல்வி, பசித்தோருக்கு உணவு, கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றைப் பற்றி விரிவாக விளக்கினார். இதுவரை 8,00,000 பயனாளர்கள் பயனடைந்துள்ளதாக மகிழ்வுடன் தெரிவித்தார். ஐந்து மாநிலங்களிலும் சேவாலயாவின் செயல்பாடுகள் விரிவடைந்துள்ளதாக கூறினார்.
கல்யாணி சிவகாமி நாதன் நன்றி கூறினார்.
முன்னதாக இவ்விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் 26 மாவட்டங்களில் இருந்து 196 பள்ளிகளில் 4354 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சேவாலயாவில் நீண்ட நாள் பணிபுரியும் ஊழியர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கி கௌரவித்தனர்.