வீ.கே.புதூரில் மனுநீதி நாள்முகாம்
1 min read
Human Justice Day camp at VK Budur
12.9.2024
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், கீழக்கலங்கல் மற்றும் மேலக்கலங்கல் கிராமத்திற்கான
மனுநீதி நாள் முகாமில் 161 பயனாளி களுக்கு 31 இலட்சத்து 79 ஆயிரத்து 848 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் கீழக்கலங்கல் மற்றும் மேலக்கலங்கல் கிராமத்திற்கு சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் முன்னிலையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தெரிவித்தாவது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தமிழ்நாடு முதலமைச்சர் கடைக்கோடி மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடைந்து பயனடைய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை பொதுமக்களுக்கு அறிந்திடும் வகையில் எடுத்துரைத்தார்கள். பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய உரிமைகளை அறிந்து கொண்டு அத்தனை திட்டங்களையும் பயனடைந்து வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.
இம்முகாமில் வருவாய்த் துறையின் மூலம் 118 பயனாளிகளுக்கு ரூ.3147.768/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், 2 பயனாளிகளுக்கு ரூ.2400/- க்கான முதியோர் உதவித்தொகை யினையும். 2 பயனாளிகளுக்கு গ.3000/- க்கான மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை யினையும், 7 பயனாளிகளுக்கு ரூ.9480/- மதிப்பிலான பட்டா மாறுதலுக்கான (உட்பிரிவு அல்லாதவை) ஆணையினையும். 6 பயனாளிகளுக்கு ரூ.6400/- மதிப்பிலான பட்டா மாறுதலுக்கான (உட்பிரிவு உள்ளவை) ஆணையினையும். 10 பயனாளிகளுக்கு ரூ.500/- மதிப்பிலான தென்னைமரக் கன்றுகளையும், 10 பயனாளிகளுக்கு ரூ.400/- மதிப்பிலான புங்கை மரக்கன்றுகளையும்,
தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.3300/- மதிப்பிலான எலுமிச்சை பரப்பு விரிவாக்கத்தினையும், 1 பயனாளிக்கு ரூ.3600/- மதிப்பிலான நெல்லி பரப்பு விரிவாக்கத்தினையும், 1 பயனாளிக்கு ரூ.3000/- மதிப்பிலான தென்னை பரப்பு விரிவாக்கத்தினையும், வேளாண்மைத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு உழுந்து விதைகளையும். 1 பயனாளிக்கு சூரியகாந்தி விதைகளையும், 1 பயனாளிக்கு மக்காச்சோள விதைகளையும் என மொத்தம் 161 பயனாளிகளுக்கு ரூ.31 இலட்சத்து 79 ஆயிரத்து எண்ணூற்று நாற்பத்து எட்டு மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
மனுநீதி நாள் முகாமில், தோட்டக்கலை துறை வேளாண்மை துறை, சமூகநலத்துறை, குழந்தை வளர்ச்சித்துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில். தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா. வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் செ.சுடலைமணி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திவ்யாமணிகண்டன், துணைத்தலைவர் செல்வகொடி ராஜாமணி, மாவட்ட கவுன்சிலர் முத்துலெட்சுமி அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் பால சரஸ்வதி முருகையா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.