கடையத்தில் தொலைதூர கல்வி – இணைய வழி கல்வி; மாணவர் சேர்க்கை தொடக்க விழா
1 min read
Online Distance Education – Online Education; Admission Inauguration Ceremony
12.9.2024
தென்காசி மாவட்டம்,
கடையத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மற்றும் இணைய வழி கல்வி மாணவர் சேர்க்கை தொடக்க விழா நடைபெற்றது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மற்றும் இணைய வழி கல்வி மாணவர் சேர்க்கை தொடக்க விழா மற்றும் உலக எழுத்தறிவு தின விழா கடையத்தில் நடைபெற்றது.
வெய்க்காலிபட்டி புனித ஜோசப் கல்p குழும தாளாளர் முனைவர் சகாயஜான் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் வில்சன் அருள் ஆனந்தன் வரவேற்றார். மத்திய பிரதேசம் சுவாமி விவேகானந்தா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் மணிக்குமார் மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டை, பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.
கடையம் தென்னிந்திய திருச்சபைகளின் பாதிரியார் வில்சன், தென்காசி மெடி அகாடமி இயக்குனர் முனைவர் சுரேஷ்ஜான் கென்னடி, தென்காசி மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனர் கே.ஆர்.பி.இளங்கோ, பேராசிரியர்கள் பிரான்சிஸ், குப்புசாமி, நூலகர் தீபன், உடற்கல்வி இயக்குனர் அலெக்ஸ், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் ஆனந்த், செயலர் தங்கராஜ், பொருளாளர் சுமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மைய உதவியாளர்கள் செய்யது அலி பாத்திமா, செய்யது சுமையா, சங்கீதா, இமாம் செய்திருந்தனர். முடிவில் புனித ஜோசப் கல்லூரி விளையாட்டு துறை இயக்குனர்சிவராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.