July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

சிதம்பரம் அருகே கார் மீது லாரி மோதல்-ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

1 min read

Truck collides with car near Chidambaram- 5 members of the same family were killed

12.9.2024
மயிலாடுதுறை மாவட்டம் பூந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் இதயத்துல்லா. துபாயில் இருந்து இவர் உடல்நலைக்குறைவால் அவதிப்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்தார்.

அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக இவரது மைத்துனரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த முகமது அன்பர்(56) தனது உறவினர்களுடன் ஒரு காரில் சென்று உள்ளார்.
இவர்கள் சென்னை சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இதயத்துல்லாவை பார்த்துவிட்டு நேற்று இரவு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த காரை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் கிராமத்தை சேர்ந்த யாசர் அராபத்(40) ஒட்டி வந்தார். இந்த காரில் முகமது அன்வர் அவர்களது உறவினர்களான அதே கிராமத்தை சேர்ந்த ஹாஜிதா பேகம்(62) திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஹரபத் நிஷா(30) அவரது 3 வயது குழந்தை அப்னான் ஆகியோர் பயணம் செய்தனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை பு.முட்லூர் மேம்பாலம் அருகே வந்த போது எதிரே சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி சென்ற லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காரின் இடுப்பாடுகளில் சிக்கி முகமது அன்வர், ஹாஜிதா பேகம், ஹரபத்நிஷா அவரது 3 வயது குழந்தை அப்னான் ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுங்காயங்களுடன் மீட்கப்பட்ட டிரைவர் யாசர் அராபத்தும் மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிர் இழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளை சிக்கியவர்களின் உடலை மீட்டனர் இந்த சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
விபத்து காரணமாக சிறிது நேரம் வழிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது இறந்தவர்களின் செல்போனை எடுத்த போலீசார் அதில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு வந்து விபத்தில் பணியாளர்களின் உடல்களை பார்த்து கதறி அழுகிறது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது கார் மீது லாரி மோதி குழந்தை பெண்கள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.