கடையம்: 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி- சிறுவன் சாவு
1 min read
End: Mother attempts suicide by poisoning 3 children – boy dies
20.9.2024
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மகளிர் சுய உதவி குழு கடன் தொல்லை காரணமாக மூன்று மகன்களுக்கு விஷம் கொடுத்ததோடு தானும் விஷம் எனதின்று தற்கொலை முயற்சி செய்தநிலையில் 4 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள செல்லப் பிள்ளையார்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் குமாவேலு இவரது மனைவி உச்சி மாகாளி(வயது40). இவர்களுக்கு பழனி சக்தி குமரன்
(வயது 7), இந்திர வேல் (வயது 6) பிரவின் ராஜ் ( வயது 4) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர் .
குமாரவேலு புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். உச்சி மாகாளி ஐந்து தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து சுமார் மூன்று லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கடனை வார வாரம் செலுத்தி வருகிறார் .இந்த நிலையில் நேற்று கடன் தொகையாக 2500 செலுத்த வேண்டி இருந்தது. இதற்காக அவர் அக்கம் பக்கத்தில் கடன் கேட்டுள்ளார் .தொடர்ந்து பணம் கிடைக்காததால் மனம் உடைந்த அவர் கொடிய விஷம் கொண்ட அரளி விதையை அரைத்து தின்ற தோடு தனது மூன்று மகன்களுக்கும் கொடுத்துள்ளார்
அதனைத் .தொடர்ந்து குழந்தைகள் வாந்தி எடுக்கவே அக்கம் பக்கத்தினர் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்ததில் மூன்று பேருக்கும் அரளி விதையை அரைத்து கொடுத்ததாக தாய் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்று அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதில் பிரவின்ராஜ்
(வயது 4) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் உச்சிமாகாளி மற்றும் அவரது இரு மகன்களுக்கும் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் தனியார் நிதி நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு பெண்களை குறி வைத்து குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி பணத்தை கொடுத்து கெடுபிடி வசூல் செய்வதோடு குறித்த நேரத்தில் பணம் செலுத்த முடியாத பெண்களை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அடாவடியாகவும், அவதூராகவும் அத்துமீறி பேசுவதாகவும் இதனால் பெண்கள் இது போன்ற தவறான முடிவுகளை எடுத்து வருகிறார்கள் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவே தென்காசி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தென்காசி மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.