June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

அதிக நேரம், குறைந்த நேரம் வேலை செய்யும் நாடுகள் பட்டியல்

1 min read

List of countries with long and short working hours

20.9.2024
அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனால் சில நாடுகளில் சிறு நிறுவனங்கள் வேலை வார நாட்களை குறைத்து அறிவிப்பை வெளியிட்டன. இதனால் தொழிலாளர்கள் நீண்ட நேரம் பணி செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறைந்த சராசரி வேலை வார நாட்களை கொண்டு 5 நாடுகள் குறித்து பார்ப்போம்…
வனுவாட்டு: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 24.7 மணிநேரம்
கிரிபட்டி : ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 27.3 மணிநேரம்
மொசாம்பிக்: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 28.6 மணிநேரம்
ருவாண்டா: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 28.8 மணிநேரம்
ஆஸ்திரியா: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 29.5 மணிநேரம்.

மிக நீண்ட வேலை வாரங்களைக் கொண்ட 5 நாடுகள் வருமாறு:-
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: ஒரு வேலையில் இருப்பவருக்கு வாரத்திற்கு சராசரியாக 52.6 மணிநேரம்
காம்பியா: ஒரு வேலை செய்யும் நபருக்கு வாரத்திற்கு சராசரியாக 50.8 மணிநேரம்
பூட்டான்: ஒரு வேலையில் இருப்பவருக்கு வாரத்திற்கு சராசரியாக 50.7 மணிநேரம்
லெசோதோ: ஒரு வேலையில் இருப்பவருக்கு வாரத்திற்கு சராசரியாக 49.8 மணிநேரம்
காங்கோ: பணிபுரியும் நபருக்கு வாரத்திற்கு சராசரியாக 48.6 மணிநேரம்
இந்த மணிநேரங்கள் சமமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸில், வேலை செய்பவர்களில் 46% பேர் வாரத்திற்கு 49 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறார்கள்.
இது ‘அதிகப்படியான வேலை வரம்பு’ என்று கருதப்படுகிறது. ஆஸ்திரியாவில் பணிபுரிபவர்களில் 8% பேர் மட்டுமே அதிக வேலை வரம்புக்கு மேல் வேலை செய்கிறார்கள்.

சராசரி அமெரிக்கத் தொழிலாளி வாரந்தோறும் 36.4 மணிநேரத்துடன் நடுநிலையில் உள்ளார். இந்த எண்ணிக்கை தென் கொரியா (37.9 மணி நேரம்), சீனா (46.1), ரஷியா (37.8) மற்றும் இந்தியா (47.7) ஆகியவற்றை விட குறைவாக உள்ளது,

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.