திருவேங்கடத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்-ஆட்சியர் ஆய்வு
1 min read
Search for you in Thiruvenkatam in your town project-administrative survey
20.9.2024
தென்காசி மாவட்டம்
திருவேங்கடம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட மூலம் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள், ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார்கள்.
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து சிவகிரி, சங்கரன்கோவில், வீரகேரளம்புதூர், செங்கோட்டை, தென்காசி ஆகிய தாலுகாக்களைத் தொடர்ந்து, நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்,தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களின் கற்றல், கற்பித்தல் திறன்களை குறித்து நேரில் பார்வையிட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், மாணவ, மாணவியர்களின் வருகைப்பதிவேடு குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு சுகாதார நிலையத்தில் தாய் சேய் வார்டுகளை ஆய்வு செய்தும், மருந்துகளின் இருப்புகள் மற்றும் வருகைப்பதிவேடுகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் ஆகியவற்றை கேட்டறிந்தார். திருவேங்கடம் வட்டம் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் குறிஞ்சான்குளம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குறிஞ்சான்குளம் நடுநிலைப்பள்ளியில் மாணவச் செல்வங்களுடன் கலந்துரையாடி குழந்தைகளுக்கு உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தினையும் குழந்தைகளின் கல்வித்திறனை சோதனை செய்தும், உள்கட்டமைப்பு வசதி குறித்தும். கல்வி முறையினையும் கேட்டறிந்து அரசுபள்ளி நம் பள்ளி அரசு பள்ளியில் சேர்வோம் என்று அச்சிட்ட மஞ்சள் பையினை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கியும். குருவிகுளம் காவல் நிலையத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், அங்கன்வாடி பள்ளியில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மதிய உணவின் தரத்தினையும், மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறன்களையும், குருவிகுளம் ஊராட்சியில் நூலகத்தினை ஆய்வு செய்து இருப்பில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை கேட்டறிந்து குருவிகுளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, திருவேங்கடம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தானியங்கிக் கிடங்கில் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட உள்ள குடிமைப்பொருட்களின் இருப்புகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து குருவிகுளம் அரசு ஆதிதிராவிடர் மாணவியர் நல விடுதியில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் மற்றும் அடிப்படை வசதி, கல்விமுறைகளை கேட்டறிந்து மாணவிகளுடன் கலந்துரையாடினார். குருவிகுளம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தின் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண்வணிகத்துறை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள பொருட்களின் இருப்புகளையும், தரத்தினையும், மற்றும் திருவேங்கடம் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி,பாமாயில் சீனி உள்ளிட்ட பொருட்களின் இருப்புகளையும், தரத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார ஒருங்கிணைந்த நாற்றாங்கால் பண்ணையில் நடைபெறும் பணிகளை நேரில் பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, இன்று முழுவதும் திருவேங்கடம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அலுவலகங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுவதோடு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு முறையான கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் отоот ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்கள். மாவட்ட
இந்த ஆய்வின் போது திருவேங்கடம் வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.