தென்காசியில் துப்பாக்கி சுடும் போட்டி – ஆட்சியர் துவக்கி வைத்தார்
1 min read
Shooting Competition in Tenkasi – District Collector inaugurated
20.9.2024
தென்காசியில் பள்ளி மாணவர்களுக்கான மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – 2024 தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி சார்பாக, நெல்லை- தென்காசி மெயின் ரோடு, மேலமெஞ்ஞானபுரத்தில் அமைந்துள்ள தென்காசி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப்பில் வைத்து 19/09/2024 முதல் 22/09/2024 வரை நடை பெறுகிறது.
இதற்கான துவக்க விழா நேற்று நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் போட்டியினை துவக்கி வைத்து, ரைபிள் கிளப் வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு ஷூட்டிங் அசோசியேஷன் செயலாளர் வேலு சங்கர், தென்காசி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப் செயலாளர் ஜே.எம்.ரஷீத், இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியின் எக்ஸிகியூடிவ் டைரக்டர் ராம்குமார், பள்ளி முதல்வர் மோனிகா டி ஷோசா,பி.ஆர்.ஓ. பாலமுருகன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சேவியர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதில் தமிழ்நாடு,ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய மாநிலங்ளைச் சார்ந்த சுமார் 750 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான பரிசளிப்பு விழா வரும் ஞாயிறு 22/09/2024 அன்று நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னர் மே மாதம் தென்காசி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப்பில் நடந்த பிரண்ட்லி இன்டர் டிஸ்ட்ரிக்ட் ஷூட்டிங் காம்பெடிஷனில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி.எஸ் ஆபீசர்ஸ் ரகுநாத், ஷாஜி குட்டப்பன், நவ்நீத் கிருஷ்ணன், முகம்மது ஷமீர் சேட் மற்றும் சமீமா பர்வீன் ஆகியோர்கள் போட்டியினை சிறப்பாக நடத்த உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப்பின் நிர்வாகிகள் முகம்மது ரஷீத், சமீர் சேட், சக்தி மணிகண்டன், முர்ஷித் அகமது ரிஸ்வி, கோமதி மற்றும் தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியின் பி.ஆர்.ஓ.பாலமுருகன், உடற்கல்வி இயக்குனர் சேவியர், உடல் கல்வி ஆசிரியர்கள் ஆசிரியைகள், பள்ளி மற்றும் ரைபிள் கிளப் ஊழியர்கள் சிறப்பாக செய்துள்ளார்கள்.