தென்காசி, நெல்லை மாவட்டத்தில் நில அதிர்வு – ரவி அருணன் அதிர்ச்சி தகவல்
1 min read
Earthquake in Tenkasi, Nellai district – Shock panics the public
22.9.2024
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் நேற்று திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பலகிராமங்களில் இன்று காலை 11.45 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
மனிமுத்தாறு, வி கேபுரம், ஆம்பூர் , கல்யாணிபுரம், கடையம் பகுதிகளில் நிலநடுக்கம்
அம்பை , கல்லிடைக்குறிச்சி சிங்கம்பட்டி பகுதியில் சிறிய அளவிலான (மைக்ரோ ) நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மாஞ்சோலை, காரையாறு சேர்வலாறு, உள்ளிட்ட இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், கல்யாணிபுரம், கடையம், ஆழ்வார்குறிச்சி கல்யாணி புரம் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் . அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நில அதிர்வினால் இதுவரை பொதுமக்கள் யாருக்கும் காயமோ பிற சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக களஅலுவலர்கள் மூலம் அப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது பற்றி இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் முன்னாள் தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ரவி அருணன் கூறியிருப்பதாவது:-
தென்காசி.திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள லேசான நில அதிர்வு செய்தி அறிந்து இயற்கை வள பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்
நாங்கள் பல நாட்களாக இதைத்தான் சொல்லி வந்தோம்.
நம் பகுதியில் உள்ள கல் குவாரிகள் பூமியை தோண்டி அதில் அதிநவீன சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை பயன்படுத்தி வெடிக்க வைத்து பாறை இடுக்குகளில் உள்ள தண்ணீர்களை எல்லாம் வெளியில் கொண்டு வந்து ஆவியாக செய்து பல லட்சம் டன் கனிம வளங்களை கேரளாவிற்கு கொண்டு செல்கிறார்கள்
இதனால் முதலில் விவசாயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது
அதன் பின் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு சில அமைப்புகள் கணித்திருந்தது.
அதன் பின்னும் அடங்காத இந்த கனிமவள கொள்ளையர்கள் மீண்டும் மீண்டும் அதே வேலையை செய்து அளவுக்கு அதிகமான கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி வந்தனர்.
அதனை விளைவாக இயற்கை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது இனியாவது அரசாங்கம் விழித்துக் கொண்டு அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடை செய்ய தனி சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழகத்தில் இருந்து இயற்கை வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு அனைத்து கட்சிகளுமே எதிராக குரல் கொடுக்காமல் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சில எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டம் செய்யப் போவதாக குரல் எழுப்பினாலும் அவர்களை போராட்டம் செய்யவிடாமல் கனிமவள கடத்தல் காரர்கள் சரி கட்டி விடுகின்றனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகாவது அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கனிம வள கடத்தலுக்கு எதிராக குரல் கொடுத்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம். ‘