ஒரே இரவில் உக்ரைனின் 101 டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்
1 min read
Russian military destroys 101 drones in Ukraine overnight
22.9.2024
உக்ரைன் நாட்டிற்கும் ரஷியாவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாகவே மோதல் நிலவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஒரே இரவில் 101 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் 53, கிராஸ்னோடர் பகுதியில் 18, மற்றும் கலுகா, ட்வெர் மற்றும் பெல்கோரோட், ஸ்மோலென்ஸ்க் மற்றும் குர்ஸ்க் பிராந்தியங்கள் மற்றும் அசோவ் கடலுக்கு அருகில் பல டிரோன்கள் அழிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கிராஸ்னோடர் பிராந்தியத்தின் டிகோரெட்ஸ்க் மாவட்டத்தில், இரண்டு டிரோன்கள் விழுந்ததால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 1,200 பேர் வெளியேற்றப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சூழலில், உக்ரேனிய எரிசக்தி வசதிகள், டிரோன் தயாரிப்புப் பட்டறைகள் மற்றும் பணியாளர்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களின் இருப்பிடங்கள் மீது ரஷியப் படைகள் நேற்று இரவு உயர் துல்லியமான ஆயுதங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் ஒரு குழு தாக்குதலை நடத்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.