“இந்தியா? சீனா?-யாரு பக்கம் இலங்கை” அதிபர் விளக்கம்
1 min read
“India? China?-whose side is Srilanka” presidential explanation
26.9.2024
இலங்கை அதிபராகப் பதவியேற்றுள்ள இடதுசாரி தலைவர் அனுர குமார திசநாயக கொள்கை ரீதியாக சீனாவுக்கே அதிக ஆதரவு அளிப்பார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இனி வரும் காலங்களில் இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு குறித்து திசநாயக விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
அதிகரித்து வரும் பிராந்திய பிரச்சனைகளுக்கு இடையே இலங்கையின் வெளியுறவுக் கொள்கை நாட்டின் இறையாண்மையைப் பேணுவதையே பிரதானமாக கொண்டு அமையும். புவிசார் அரசியல் சண்டைகளில் நாங்கள் பங்குபெறப் போவதில்லை. எந்த பக்கமும் நாங்கள் சாயமாட்டோம்.
குறிப்பாக இந்தியா-சீனா இடையில் நாங்கள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. இரண்டு நாடுகளின் நடப்பையும் நாங்கள் போற்றுகிறோம். எங்கள் அரசின் கீழ் இனி வரும் காலங்களில் இரு நாடுகளுடனும் நெருக்கத்தை அதிகரிக்க முயற்சிப்போம். மேலும், ஐரோப்பிய யூனியன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனும் நட்புறவு ஏற்படுத்த விழைகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.