ஸ்ரீவில்லிபுத்தூர்: மினி பஸ் கவிழ்ந்து, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி
1 min read
Mini bus overturned in Virudhunagar; 4 people including school students were killed
27.9.2024
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மம்சாபுரம் அருகே மினி பஸ் கவிழ்ந்து 3 மாணவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். 15 பேர் பலத்த காயமுற்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மம்சாபுரத்திலிருந்து இன்று(செப்.,27) காலை 8:10 மணிக்கு ஒரு மினி பஸ் புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்றது. பள்ளி, கல்லுாரி செல்வோர், பணிக்கு செல்வோர் என 30 பேர் சென்றனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ்,சாலையின் இடது புறம் பள்ளத்தில் உருண்டது.
இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 15 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். சம்பவ இடத்தில் போலீசார், வருவாய்த் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தை தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மம்சாபுரத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்கவும், ரோட்டை அகலப்படுத்த கோரி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.