June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட தனிப்பிரிவு போலீசார் பணியிட மாற்றம்

1 min read

enkasi District Special Branch Police Transfer

28.9.2024
தென்காசி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசாரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய ஏட்டு பி.செந்தில் ரமேஷ் குற்றாலம் தனிப்பிரிவுக்கும், இலத்தூர் தனிப்பிரிவு எஸ்.இசக்கி செங்கோட்டை தனிப்பிரிவுக்கும், அச்சன்புதூர் ஏட்டு ஷேக் மஜீத் ரஹ்மான் அச்சன்புதூர் தனிப்பிரிவுக்கும், புளியரை இ.ஸ்ரீதர் சாம்பவர்வடகரை தனிப்பிரிவுக்கும், செங்கோட்டை தனிப்பிரிவு எம்.அரவிந்தராஜ் இலத்தூர் தனிப்பிரிவுக்கும், சுரண்டை பி.ஜோதிமுருகன் சுரண்டை தனிப்பிரிவுக்கும், சுரண்டை தனிப்பிரிவு ஏட்டு டி.மணிகண்ட பிரபு ஊத்துமலை தனிப்பிரிவுக்கும், தென்காசி இ.இசக்கிமுத்துகுமார் பாவூர்சத்திரம் தனிப்பிரிவுக்கும், சாம்பவர்வடகரை எஸ்.ஆறுமுகபாண்டியன் கடையம் தனிப்பிரிவுக்கும், பாவூர்சத்திரம் ஏட்டு கே.ஸ்ரீதரகிருஷ்ணன் புளியரை தனிப்பிரிவுக்கும், ஆலங்குளம் எம்.சுரேஷ் வாசுதேவநல்லூர் தனிப்பிரிவுக்கும்,
சொக்கம்பட்டி தனிப்பிரிவு எம்.செந்தில்குமார் கடையநல்லூர் தனிப்பிரிவுக்கும், கடையநல்லூர் தனிப்பிரிவு ஏட்டு பி.ராமசாமி சொக்கம்பட்டி தனிப்பிரிவுக்கும், புளியங்குடி தனிப்பிரிவு ஏட்டு எஸ்.மருதுபாண்டியன் சி.கே.குளம் தனிப்பிரிவுக்கும், அய்யாபுரம் தனிப்பிரிவு கே.வேல்முருகன் சங்கரன்கோவில் டவுண் தனிப்பிரிவுக்கும், கரிவலம்வந்தநல்லூர் தனிப்பிரிவு எம்.சபரிகிரிசர் அய்யாபுரம் தனிப்பிரிவுக்கும், வாசுதேவநல்லூர் தனிப்பிரிவு ஏட்டு வி.பாலமுருகன் கரிவலம்வந்தநல்லூர் தனிப்பிரிவுக்கும், திருவேங்கடம் எம்.மாசானம் திருவேங்கடம் தனிப்பிரிவுக்கும், சாம்வர்வடகரை தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர்.நரசிங்கம் தென்காசி காவல் நிலையத்திற்கும், அச்சன்புதூர் தனிப்பிரிவு ஏட்டு ஏ.முத்துராஜ் கடையநல்லூர் காவல் நிலையத்திற்கும், குற்றாலம் தனிப்பிரிவு ஏட்டு கே.ராமச்சந்திரன் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கும், ஊத்துமலை தனிப்பிரிவு ஏட்டு கே.பி.முருகன் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கும், கடையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஜி.முருகன் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திற்கும், சங்கரன்கோவில் டவுண் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் வி.ராஜன் சங்கரன்கோவில் போக்குவரத்து காவல் நிலையத்திற்கும், சி.கே.குளம் தனிப்பிரிவு ஏட்டு ஏ.மாரிராஜா பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.