நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
1 min read
Chief Minister M.K.Stal’s tribute to the statue of actor Thilakam Sivaji Ganesan
1.10.2024
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சிவாஜி கணேசனின் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நடிகர் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சிவாஜி கணேசனின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு முதல் அமைச்சருடன் அமைச்சர்கள் இணைந்து மரியாதை செலுத்தினர். இவர்களுடன் நடிகர் பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
கடந்த 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சிவாஜி கணேசன் மறைந்தார். சிவாஜி கணேசனின் உடல் மறைந்தாலும் அவரது நடிப்பு தமிழ் சினிமா உள்ளவரை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடிகர் சிவாஜி கணேசன் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தேசிய விருது பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவாஜிகணேசன் படங்கள் மூலம் தேசிய உணர்வையும் பக்தி பெருக்கையும் வளர்த்தார். மேலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் நாட்டுக்கு பல நன்கொடைகள் வழங்கியுள்ளார்.