இஸ்ரேல் – ஈரான் மோதல் ஸ்கூல் பையன்கள் சண்டையாம்- டிரம்ப் சொல்கிறார்
1 min read
Israel-Iran conflict will be a schoolboy fight – Trump says
2.10.2024
பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது. அவற்றை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்து வரும் சூழலில் மக்கள் பாதுகாப்பு பங்கர்களில் தஞ்சம் அடைத்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் மீதான தாக்குதலை முறியடிக்கும்படி அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் பைடன் தலைமையிலான ஆளும் ஜனநாயக கட்சிக்கு இந்த போர் சூழல் தலைவலியாக மாறி உள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல்- ஈரான் சண்டை குறித்து குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று பேசிய டிரம்ப் கூறியதாவது:-
இது மிகவும் மோசமானதாக உள்ளது. ஆனால் இது நடந்து தான் ஆக வேண்டும். பள்ளி வளாகத்தில் இரண்டு குழந்தைகள் சண்டைபோட்டுக் கொள்வதுபோல இது உள்ளது. சில நேரம், என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்கு நீங்கள் அவர்களை அப்படியே [சண்டைபோட] விட்டுவிட வேண்டும். ஆனால் நிச்சயம் இது மோசமான போர். இது எங்கு சென்று முடியும்? அவர்கள் [ஈரான்] 200 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர், இது நிச்சயம் நடக்கக்கூடாத ஒன்று, எனவே மத்திய கிழக்கில் நாம் [அமெரிக்கா] தலையிட்டாக வேண்டும்.
இவ்வாறு அவரி் தெரிவித்துள்ளார்.