வானில் வட்டமடித்த விமானம்: நடுவானில் நடந்தது என்ன?
1 min read
Hovering plane: What happened in mid-air?
11.10.2024
திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.
141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
விமானத்தில் பயணத்தவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்.
இந்த நிலையில், நடுவானில் வட்டமடித்த விமானத்தில் நடந்த திக் திக் நிமிடங்களை பயணிகள் விவரித்தனர். அப்போது பேசிய பயணி ஒருவர், நாங்கள் ஷார்ஜாவை நோக்கி பயணம் செய்வதாகவே நினைத்தோம். என்ன நடந்தது என்றே தெரியவில்லை.”
“விமானத்தில் ஏற்பட்ட கோளாறு பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதன்பிறகு தான் விமானம் தரையிறங்குவதில் பிரச்சினை உள்ளது என்று கூறினர். மேலும், பதட்டம் அடையாமல் சீட் பெல்ட் அணிந்து கொள்ள அறிவுறுத்தினர்.”
“சிறிது நேரத்திற்கு விமானத்தின் மின் விளக்குகள் பலமுறை அணைந்து, மீண்டும் எரிந்தன. பிறகு விமானம் தரையிறங்கியது,” என்று தெரிவித்தார்.