பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்புகரையோர மக்களுக்கு எச்சரிக்கை
1 min read
Release of water from Pachiparai dam Warning to coastal residents
14.10.2024
கன்னியாகுமரி மாவட்ட பேரிடர் மேலாண்மை தலைவர் மற்றும் மாவட்ட
ஆட்சித்தலைவர் செயல்முறை ஆணையின் படி
பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய அளவான 43.00 அடியை கடந்து, இன்று (14.10.2024) காலை 10 மணியளவில் 43.85 அடியை எட்டியுள்ளது. அணை நீர்மட்டம் அதிக மழையினால், நீர் உள்வரத்து காரணமாக இன்று (14.10.2024) மாலை 6
மணியளவில் 250 கனஅடி/வினாடி உபரிநீர் பேச்சிப்பாறை அணையிலிருந்து
கோதையாற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம்,
குழித்துறை வழியாக தேங்காய்பட்டணம் கடலில் சென்று சேரும்.
எனவே கோதையாறு, தாமிரபரணி ஆற்றுக்கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள்
மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருப்பதோடு, ஆற்றோரப் பகுதியில்
குளிப்பதை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண் தகவலை கன்னியாகுமரி மாவட்ட
ஆட்சித்தலைவர் அழகுமீனா தெரிவித்துள்ளார்கள்.