வேளச்சேரியில் படகுகளில் மீட்கப்படும் பொதுமக்கள்
1 min read
Civilians being rescued in boats in Velachery
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தொடர் கனமழையால் வேளச்சேரி ஏ.ஜி.எஸ். குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளில் சிக்கிய முதியவர்கள், பெரியவர்கள், குழந்தைகளை தீயணைப்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். ஏஜிஎஸ் காலனியில் 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தேங்கியுள்ள மழை நீரை கனரக மோட்டார் கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.