July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

4 மாவட்ட பள்ளி, கல்லூரிகள், அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை

1 min read

Tomorrow is a holiday for 5 district schools, colleges and government public sector institutions

15.10.2024
வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று மட்டும் 42 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. இன்றும், நாளையும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுகிறது.
சேலம்,விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

நாளை (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவை துறைகளான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், எம்ஆர்டிஎஸ், ரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் வழக்கம் போல் இயங்கும். பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.
மேலும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டிற்கும் நாளை விடுமுறை வழங்கப்படுவதாக பதிவாளர் அல்லி அறிவித்து உள்ளார். பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் நாளை ((அக்.,16) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.