இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வீட்டை குறிவைத்த ஹிஸ்புல்லா டிரோன்கள்
1 min read
Hezbollah Drones Target Israeli Prime Minister Netanyahu’s Home
20.10.2024
பாலஸ்தீனம் மீதும் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு நாடுகளில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். தற்போது இஸ்ரேல் படைகளுடன் லெபனான் எல்லையில் சண்டை இட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீதும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் காசா நகரின் மீதும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா பகுதியில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது நேற்று இஸ்ரேல் நடத்தியுள்ளது.
இதில் மருத்துவர்கள் உட்பட குறைந்தது 73 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடந்த 2 வாரத்தில் மட்டும் 400 பேர் வரை இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக காசா சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து லெபனானில் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அங்குள்ள மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. ஹிஸ்புல்லா ஆயுத்தத் தளங்களையே குறிவைத்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.