காரைக்குடி: வங்கியில் தங்க நகை 533 பவுன் மோசடி-மேலாளர் உள்பட்ட 4 பேர் கைது
1 min read
Karaikudi: 533 pound gold jewelery fraud in bank- 4 persons including manager arrested
20.10.2024
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் கல்லல் பகுதியில் நீண்ட காலமாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இயங்கி வருகிறது. இந்த தனியார் வங்கியில் சிறுசேமிப்பு கணக்கு உள்பட நகை கடன் வழங்கும் நடைமுறையும் உள்ளது.
ஏராளமான பொதுமக்கள் விவசாயிகள் என பல தரப்பினரும் நகை அடமானம் வைத்து பணம் பெற்று வருவர்.
இந்நிலையில் திடீரென 533 பவுன் போலி நகைகள் வங்கியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது..
இது குறித்து சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வங்கியில் பொதுமக்கள் வைத்த தங்க நகைக்கு பதிலாக மொத்தம் 533 பவுன் போலி நகைகளை வைத்து வங்கி மேலாளர் உள்ளிட்ட நான்கு பணியாளர்கள் மோசடி செய்தது தெரிய வந்தது.
இந்நிலையில் வங்கி மேலாளர் விக்னேஷ்
( வயது 34), உதவி மேலாளர் ராஜாத்தி ( 39) மோசடிக்கு உதவியதாக ரமேஷ்( 30) சதீஷ் ( 21) ஆகிய 4 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.