நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை- இந்திய தூதர் சஞ்சய் வர்மா விளக்கம்
1 min read
I have nothing to do with Nijjar murder- Indian ambassador Sanjay Verma explains
21/10/2023
கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக கனடா தெரிவித்தது. இதனால் கனடாவுக்கான இந்திய தூதரை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் இந்தியாவில் கனடா அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.
இதற்கிடையே, நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய தூதரான சஞ்சய் வர்மா கனடா செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
நிஜ்ஜார் கொலை தொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகள் உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டதல்ல. கனடா உளவுத்துறை தெரிவித்த தகவலின் படியே அந்தக் குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார். இதை அவரே சமீபத்தில் ஒப்புக்கொண்டார். அவரின் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்தியா, கனடா இடையிலான உறவை அவர் தகர்த்துள்ளார். நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.