July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

மன்னர் சார்லஸ்க்கு எதிராக குரல் எழுப்பிய ஆஸ்திரேலியா பெண் எம்.பி.-இது உங்கள் நிலம் கிடையாது

1 min read

This is not your land: Australian female MP who spoke out against King Charles

21.10.2024
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர் நேற்று காலை ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு சென்றார். அப்போது ஆஸ்திரேயலியாவின் பூர்வீக சமூகத்தைச் சேர்ந்த பெண் எம்.பி.யான லிடியா தோர்ப், மன்னர் சார்லஸ்க்கு எதிராக குரல் எழுப்பினார். அதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
“இது உங்கள் நிலம் கியைாது, நீங்கள் என்னுடைய மன்னர் கிடையாது. மீண்டும் எங்கள் நிலைத்தை கொடுங்கள். எங்களிடம் இருந்து கொள்ளையடித்து சென்றதை எங்களிடமே கொடுங்கள் என முழக்கமிட்டார். அத்துடன் ஐரோப்பிய குடியேறிகளால் பூர்விக ஆஸ்திரேலியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்” என லிடியா தோர்ப் கூறினார்.
ஆஸ்திரேலியா 100 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் காலனியாக இருந்தது, அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடி ஆஸ்திரேலியர்கள் கொல்லப்பட்டனர். பழங்குடியின சமூகங்கள் முழுமையாக இடம்பெயர்ந்தன.
நாடு 1901-ல் சுதந்திரம் பெற்றது. ஆனால் ஒரு முழுமையான குடியரசாக மாறவில்லை. நாட்டின் தற்போதைய தலைவர் மன்னர் சார்லஸ் ஆவார்.
1999-ம் ஆண்டு ராணியை நீக்குவது தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது. மேலும், ராணிக்கு பதிலாக மாற்று நபரை மக்களால் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், குறைவான ஆஸ்திரேலியர்கள்தான் வாக்களித்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.