கனடாவில் கார் தீப்பிடித்ததில் இந்தியர்கள் 4 பேர் சாவு
1 min read
4 Indians die in car fire in Canada
27.10.2024
கனடாவின் டொராண்டோ அருகே டிவைடரில் (சாலை மைய தடுப்பு) மோதிய டெஸ்லா எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த 4 இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
குஜராத்தை சேர்ந்த கேட்டா கோஹில் (30) மற்றும் நில் கோஹில் (26) ஆகியோர் மேலும் 2 நபர்களுடன் டெஸ்லா எலக்ட்ரிக் காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது டிவைடரில் டெஸ்லா கார் மோதியுள்ளது. அதனால் டெஸ்லா காரின் பேட்டரி தீப்பிடித்தது. இதனால் சம்பவ இடத்திலேயே 4 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் கடுமையான காயங்களுடன் உயிர் பிழைத்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக காரின் கண்ணாடிகளை உடைக்க சிலர் முயன்றதாக இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.