தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 13.40 லட்சம் வாக்காளர்கள்
1 min read
3.40 lakh voters in 5 constituencies in Tenkasi district
30/10/2024
தென்காசி மாவட்டத்தில் உள்ள
5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் வெளியிட்டார்.
தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் திருத்தம் மாறுதல் தொடர்பாக 17 3 2024 முதல் 24 9 2024 வரை 5 சட்டமன்ற தொகுதி வாரியாக படிவங்கள் பெறப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சங்கரன்கோவில் சட்டமன்ற தனி தொகுதியில் 2,49411 வாக்காளர்களும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தனித் தொகுதியில் 2,46,719 வாக்காளர்களும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 2,84,380 வாக்காளர்களும் தென்காசி சட்டமன்ற தொகுதியில் 2,96,565 வாக்காளர்களும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் 2,62,957 வாக்காளர்களும் உள்ளனர் அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 13,40,032 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் ஆண் வாக்காளர்கள் 6,57,276 பேர்களும் பெண் வாக்காளர்கள் 6,82,585 பேர்களும் மூன்றாம் பாலினத்தவர்கள் 171 பெயர்களும் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் 01.01.2025 நாளை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் 29.10.2024 முதல் 28.11.2024 வரை மேற்கொள்ளப்பட உள்ளது 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி 16.11.2024 17.11.2024, 23.11.2024, 24.11.2024 ஆகிய நான்கு நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
மேற்படி சிறப்பு முகாம்களின் வரைவு வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் வாக்காளர்கள் தங்கள் வாக்கு சாவடிகளுக்கு சென்று தங்களது பெயர் விவரங்களை சரி பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு படிவம் ஆறும் பெயர் நீக்கம் செய்ய படிவம் ஏழும் பதிவினை மாற்றம் செய்ய படிவம் எட்டும் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் இந்த வாய்ப்பினை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் வருவாய் கோட்டாட்சியர்கள் தென்காசி லாவண்யா சந்திரன் கோவில் கவிதா தேர்தல் வட்டாட்சியர் ஹென்றி பீட்டர் வருவாய் வட்டாட்சியர்கள் நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் திமுக சார்பில் ராமராஜ், அதிமுக சார்பில் வல்லம் ராமச்சந்திரன், காங்கிரஸ் சார்பில் ஜி.மாடசாமி ஜோதிடர், ஈஸ்வரன்,பாஜக சார்பில் எல்.ஜி. குத்தாலிங்கம், சிபிஐ சார்பில் பாட்டப்பத்து கிட்டப்பா, உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
One attachment
• Scanned by Gmail