காந்தியின் மதநல்லிணக்கம் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது- ஜெய்சங்கர் பெருமிதம்
1 min read
Gandhi’s religious harmony resonates around the world – Jaishankar is proud
4.11.2024
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டு நாடுகள் பயணத்தின் அங்கமாக முதலில் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பிறகு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றிய அவர், வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியா, உலகத்துடன் வளர விரும்புகிறது என்றும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாடுகளிடையே உண்மையான நல்லெண்ணமும் விருப்பமும் உள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில் ரோமா சாலை பார்க்லேண்ட்ஸில் உள்ள மகாத்மா சிலைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் மதநல்லிணக்க செய்தி உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.