மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு ஐஏஎஸ் போட்டி தேர்வு பயிற்சி
1 min read
IAS Competitive Exam Coaching for Fisherman Graduate Youth
6.11.2024
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஆயத்த பயிற்சி அளிக்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
தென்காசி மாவட்டத்தை சார்ந்த உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் மீனவர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மீனவர்களின் வாரிசுதாரர்கள் 01.08.2024 ல் உள்ளபடி வயது வரம்பு 21 முதல் 32 வரையிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 35 வரையிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினப் 37 வரையிலும் வயது வரம்பு கொண்ட வரையிலும் மாற்றுத்திறனாளியாக இருப்பின் 42 பன்னிரெண்டாம் வகுப்பில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு பயின்று முடித்துள்ள மீனவ சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் படிப்பு முடித்து வேறு பணிகளில் பணிபுரிந்து வரும் தகுதியுடைய மீனவ சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள் குடிமைப்பணிகளில் சேருவதற்கான ஆயத்த பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களை கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து, இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மின்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் மற்றும் தென்காசி மீன்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை அறிய 9384824280, 04622581488 மற்றும் 7010591852, 9788293060 என்ற தொலைபேசி எண்களிலும், திருநெல்வேலி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் மற்றும் தென்காசி மீன்துறை ஆய்வாளர் அலுவலகங்களை நேரில் தொப்பு கொண்டும் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.