அமெரிக்க தேர்தலில் 6 இந்திய வம்சாவளி வெற்றி
1 min read
Indian-origin MP wins US election again
6/11/2024
அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சா வளியை சேர்ந்த 9 பேர் போட்டியிட்டனர். அவர்களில் 5 பேர் தற்போது எம்.பி.யாக உள்ளனர். அவர்களில் ஒருவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி.
இவர் சிகாகோவில் வடமேற்கு பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய இல்லினாய்ஸின் 7-வது தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.
இந்த முறையும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரீசை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.
தெற்காசிய வாக்காளர்களை குறிவைத்து மேற்கொண்ட இவரது பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்து கோவில்கள் உள்பட வழிபாட்டு தளங்களுக்கு சென்று வந்த இவர் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அமெரிக்க சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இல்லினாய்ஸின் பியோரியில் வளர்ந்த அவர் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் எந்திர என்ஜினீயரிங் பயின்றார். மேலும் ஹார்வர்டு சட்டப்பள்ளியில் பட்டம் பெற்ற இவர் உளவுத்துறை மற்றும் மேற்பார்வை குழுக்களிலும் பணியாற்றுகிறார்.
கடந்த ஆகஸ்டு மாதம் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்த போது கவலை அடைந்த இவர் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்தவதற்கு இடைக்கால வங்காளதேசம் அரசாங்கம் ஈடுபட வேண்டும் என அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரியிடம் வலியுறுத்தி இருந்தார்.
இவர் இல்லினாய்ஸில் உள்ள ஷாம்பர்க் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி பிரியா டாக்டராக உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.