July 7, 2025

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்காவின் பொற்காலமாக அமையப் போகிறது-டிரம்ப் பரவசம்

1 min read

It’s about to be America’s golden age—Trump ecstasy

6.11.2024
‘அமெரிக்காவின் பொற்காலமாக அமையப் போகிறது’ என அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தார். அவர் புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் வெற்றி உரை ஆற்றினார்.அப்போது அவர் பேசியதாவது: குடியரசுக் கட்சி வெற்றிக்காக, ஓட்டளித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி. இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப் போகிறது. இதுவரை யாரும் காணாத வகையில், ஒரு இயக்கத்தை நடத்தி வெற்றி வாகை சூடியுள்ளோம்.
அமெரிக்கா மக்களுக்காக கடுமையாக உழைப்பேன். பிரச்னைகளை தீர்ப்பேன். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும். மக்கள் என்னை நம்பி தான் ஓட்டளித்துள்ளனர். அவர்கள் நம்பிக்கை வீண் போகாது. அமெரிக்கா மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன். எண்ணில் அடங்காத தடைகளை கடந்து வெற்றி பெற்றுள்ளேன். அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவேன்.
வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மனைவிக்கு நன்றி. இக்கட்டான சூழலில் எனக்கு துணையாக இருந்த குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. நாட்டை சீரமைத்து மீண்டும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம். அதிபர் தேர்தல் மட்டுமல்ல செனட் மக்கள் சபையிலும் நமக்கே முன்னிலை கிடைத்துள்ளது. தேர்தல் வெற்றிக்கு முக்கியமான நபர் எலான் மஸ்க்; எனக்கு ஆதரவளித்த X தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்குக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.