பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகள்- தென்காசி எம்.பி. நேரில் ஆய்வு
1 min read
Pavoorchatram Railway Flyover Works- Tenkasi M.P. In person inspection
13/11/2024
தென்காசி மாவட்டம்,
பாவூர்சத்திரத்தில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகளை டாக்டர் ராணிஸ்ரீகுமார் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.
நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் ரூ. 430 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் போக்குவரத்து அதிகம் நெருக்கடி கொண்ட பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
நீண்ட இழுபறிக்கு பிறகு பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்துக்கு மேலே அமைய இருக்கும் மேம்பால பகுதியில் வரைபட ஒப்புதல் கிடைக்கப் பெற்று அடுத்த கட்ட பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் பில்லர் அமைப்பதற்கான பள்ளம் தோண்டும் பணிகள் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தென்காசி எம்.பி. டாக்டர் ராணிஸ்ரீகுமார் நேற்று பாவூர்சத்திரம் வருகை தந்து ரெயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேம்பால பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, ஒன்றிய செயலாளர் க.சீனித்துரை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், ஒன்றிய கவுன்சிலர்கள் தர்மராஜ், வீராணம் சேக்முகமது, கபில்தேவதாஸ் மற்றும் ரெயில்வே பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக தென்காசி மாவட்ட ரெயில்வே பயணிகள் நலச்சங்க தலைவர் பாண்டியராஜ் தலைமையில் நிர்வாகிகள் எம்.பியிடம் அளித்த மனுவில், வாரம் மூன்று நாட்கள் இயங்கிவரும் தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயிலை .தினிசரி ரயிலாக இயக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொண்டனர்.