தமிழக மீனவர்கள் 11 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை இலங்கை கோர்ட்டு உத்தரவு
1 min read
Sri Lanka court orders 2 years imprisonment for 11 fishermen from Tamil Nadu
13.11.2024
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 10-ந்தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.