July 7, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி புத்தக திருவிழாவுக்கு வர மாணவர்களுக்கு இலவசபஸ் வசதி

1 min read

Free bus facility for students to come to Tenkasi Book Festival

15.11.2024
தென்காசி மாவட்டத்தில் புத்தக கண்காட்சி திருவிழா 15.11.2024 முதல் 24.11.2024 வரை தென்காசி ஐ.சி.ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள வருகை தரும் மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் புத்தக கண்காட்சி திருவிழா 15.11.2024 முதல் 24.11.2024 வரை தென்காசி ஐ.சி.ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள வருகை தரும் மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் இந்த நாட்களில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளையும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்க செய்யும் வகையில் தென்காசி மாவட்டத்தில் மாணவ மாணவிகள் எங்கியிருந்து பயணித்தாலும் தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு நகர பேருந்தில் இலவசமாக பயணிக்க அரசு போக்குவரத்து நகர பேருந்து களில் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட 10 நாட்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட மாணவ மாணவிகளை மாவட்டத்தில் எங்கியிருந்தும் தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கும், அதைபோல் கண்காட்சியில் கலந்து கொண்டும் திரும்பும் போது தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தில் எந்த ஊருக்கும் நகரப்பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கலாம் என்று தென்காசி செங்கோட்டை புளியங்குடி சங்கரன்கோவில் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்குஅ இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.