தென்காசி மாவட்டத்தில் 1302 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
1 min read
Nutrition fund for mothers of 1302 children in Tenkasi district
15.11.2024
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தினை இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டம் வாரணவாசி குழந்தைகள் மையத்தில் ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கி துவங்கி வைத்தார்கள்
தென்காசி மாவட்டம் தென்காசி வட்டாரம் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட மேல பாறையடித் தெரு சமுதாய நலக்கூடத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் , குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்.
நம் தாய் திரு நாடாம் தமிழக மண்ணில் பிறந்தது முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தி அனைவரும் சரியான ஊட்டச்சத்து நிலையில் உள்ளனர் என்பதை உறுதி செய்து ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், நலமான குழந்தைகள் வளமான குழந்தைகள் என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய மாநிலங்களுக்கு முன்னோடியாக பெண் குழந்தைகளுக்கென முன்னோடியாக பல்வேறு எண்ணற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் எடை குறைவான குழந்தைகள் மற்றும் மிதமான எடை குறைவுள்ள குழந்தைகளுக்கு முதல் கட்டமாக ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தினை 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 0.6 மாதம் வரை கடுமையான எடை குறைவாக உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டதன் மூலம் 77.3 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
அதனடிப்படையில் இன்றைய தினம். தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 0-6 மாதம் வரை கடுமையான எடை குறைவாக உள்ள 1302 குழந்தைகளின் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. எனவே. ஊட்டச்சத்து குறைபாடுள்ள 0.6 மாதம் வரை கடுமையான எடை குறைவாக உள்ள குழந்தைகளின் தாய்மார்கள் அனைவரும் தென்காசி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் ஊட்டசத்தை உறுதி செய் திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து பெட்டகத்தினை பெற்று ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலர் செல்விமதிவதனா, தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி. உதயகிருஷ்ணன்,தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.