விரைவில் தென்காசி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி-அமைச்சர் உறுதி
1 min read
Tenkasi District Central Co-operative Bank-Minister confirmed soon
16.11.2024
தென்காசி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசினார்.
தென்காசியில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவி லான கூட்டுறவு வார விழா நடந்தது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச் சந்திரன் தலைமை வகித் தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட திமுகபொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நரசிம்மன் அனைவரையும் வரவேற்று பேசினார். இணைப்பதிவாளரும். செயலாட்சியருமான உமா மகேஸ்வரி கூட்டுறவு சங்க. செயல்பாடுகள் குறித்து பேசினார். கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் பூர்விசா உறுதி மொழி வாசித்தார்.
இந்த விழாவில் அமைச் சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பங்கேற்று சிறந்த சங்கங்களுக்கான கேடயம் மற்றும் கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிக ளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், நலத்திட்ட உதவி கள் வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் பேசியதாவது:-
தென்காசி மாவட்டத் தில் தமிழ்நாடு அரசு அறி வித்த 5 சவரனுக்குட்பட்ட பொது நகைக்கடன்கள் தள்ளுபடி மூலம் 28,420 குடும்பங்கள் ரூ.136 கோடி அளவில் பயனடைத்துள் ளனர். மகளிர் சுய உதவிக்
குழுக்கள் கடன் தள்ளுபடி மூலம் தென்காசி மாவட் டத்தில் 1,637 மகளிர் சுய உதவிக்குழுக்களின் 15,815 மகளிர் உறுப்பினர்கள் ரூ. 48.47 கோடி அளவில் பயனடைந்துள்ளனர். கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த வடகி ழக்கு பருவ மழையால்
பாதிக்கப்பட்டமக்களுக்கு ரூ.1000 வீதம் ரொக்கமாக வழங்கப்படும் என முதல் வர் மு.க.ஸ்டாலின் அறி வித்தார். அதன்பேரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 13 ஆயி ரத்து 49 குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.30 கோடி வெள்ள நிவாரணம் கூட டுறவுத்துறையின் மூலம் வழங்கப் பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 2023- 2024ம் ஆண்டில் 29,693விவ சாயிகளுக்கு ரூ.30344கோடி பயிர்க்கடன் வழங்கப்பட் ள்ளது. நடப்பாண்டில்
அக்டோபர் மாதம் வரை9.116
விவசாயிகளுக்கு ரூ.101
கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.
மத்தியகூட்டுறவு வங்கி தற்போது நெல்லையில் செயல்பட்டு வருகிறது. அதனை பிரித்து தென்காசி மாவட்டத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவ லர் ஜெயச்சந்திரன் தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா, தாசில்தார் ராம்குமார், மாவட்ட பஞ் சாயத்து துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், இலஞ்சி பேரூராட்சி மன்றத் தலை வர் சின்னத்தாய்உட்பட பலர் பங்கேற்றனர். கூட் டுறவு சங்க செயலாட்சி யர் மாரியப்பன் நன்றி கூறினார்.